மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

X
அரியலூர், ஏப்.22- அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கூட்டத்துக்கு, ஆட்சியர் பொ.ரத்தினசாமி தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 472 மனுக்களை பெற்றார். பின்னர் அவர், அந்த மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். முன்னதாக அவர், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் 4 மாற்றுத்திறன் பயனாளிகளுக்கு தலா ரூ.6,359 மதிப்பில் என மொத்தம் ரூ.25,436 மதிப்பிலான மின்மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரமும், 1 பயனாளிக்கு சட்டபூர்வ பாதுகாவலர் சான்றிதழையும் வழங்கினார். இக்கூட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் ரவிச்சந்திரன், கூட்டுறவுத் துறை மண்டல இணைப் பதிவாளர் எம்.உமா மகேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். படவிளக்கம்: அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் மாற்றுத்திறனாளி பயனாளி ஒவருக்கு தையல் இயந்திரத்தை வழங்கிய ஆட்சியர் பொ.ரத்தினசாமி
Next Story

