ராணிப்பேட்டை:ரயிலில் கஞ்சா கடத்திய வாலிபர்கள் கைது!

X
சென்னையில் இருந்து பெங்களூரு வரை செல்லும் பிருந்தாவனம் ரயிலில் கஞ்சா கடத்தி செல்வதாக ராணிப்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் ராணிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகுமார் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் அம்மூர் ரயில் நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த னர். அப்போது ரயிலில் இருந்து இறங்கி வந்த 3 வாலிபர்களை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்த பல்வாசிவாஜி (வயது 22), வெப்படராமு (36), முள்ளி கணேஷ் (25) என்பதும், ரெயிலில் கஞ்சா கடத்தி வந்ததும் தெரியவந்தது. மேலும் ரயிலில் சோதனைகள் அதிகமாக உள்ளதால் அம்மூரில இருந்து பஸ் மூலம் செல்ல திட்டமிட்டதும் தெரியவந்தது. உடனடியாக அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். அவர்கள் கடத்தி வந்த 21 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.கைது செய்யப்பட்ட 3 பேரும் ராணிப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
Next Story

