ஆற்காடு ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்

X
ஆற்காடு ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் வட்டார வளர்ச்சி அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. ஒன்றியக்குழு தலைவர் புவனேஸ்வரி சத்தியநாதன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ஸ்ரீமதிநந்தகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கடேசன், சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கே.வேளூர், தாஜ்புரா, கத்தியவாடி, ஆயிலம் உள்ளிட்ட பலவேறு ஊராட்சிகளில் சிமெண்டு சாலை, கழிவுநீர் கால்வாய், பஸ் பயணிகள் நிழற்கூடம் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கோபாலகிருஷ்ணமூர்த்தி, ரவிசந்திரன், சரண்ராஜ், கஜபதி, ஜெயகாந்தன், சிவா, சுசிலா வேலு, சுலோச்சனா சண்முகம், காஞ்சனாசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story

