சொத்துக்காக தம்பியை குத்திய அண்ணன் கைது

X
கன்னியாகுமரி அருகே குலசேகரன் புதூரை சார்ந்தவர் ராமசாமி பிள்ளை என்பவரது மகன்கள் இசக்கியப்பன் (44), சுடலை யாண்டி (39). அண்ணன் தம்பி சுடலை யாண்டி பெயிண்டிங் வேலை செய்து வருகிறார். இசக்கியப்பன் ஆட்டோ ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். சுடலை யாண்ட்டிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. எனவே வீட்டினை இசக்கியப்பன் பெயருக்கு மாற்றி தர வேண்டுமென இசக்கியப்பன் அடிக்கடி சுடலையாண்டியிடம் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று நல்ல குடிபோதையில் வந்த இசக்கியப்பன் சுடலை யாண்டியை பார்த்து வீட்டை என் பெயரில் எழுதி தா என கேட்டுள்ளார். இதில் ஏற்பட்ட தகராறில் சுடலை யாண்டியை கத்தியால் இசக்கியப்பன் குத்தினார். இது குறித்து தம்பி சுடலை யாண்டி, அண்ணன் இசக்கியப்பன் மீது சுசீந்திரம் காவல் நிலையத்தார் புகார் அளித்தார். சுசீந்திரம் போலீசார் இசக்கியப்பனை கைது செய்தனர்.
Next Story

