கோவை: புதிய அறங்காவலர் நியமனத்திற்கு எதிர்ப்பு ?

X
கோவை மாவட்டம் சூலூர் ஜே. கிருஷ்ணாபுரத்தில் உள்ள மதுரை வீரன் பட்டத்தரசி அம்மன் கோவிலில் புதிய அறங்காவலர் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் அறநிலையத் துறை அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது. நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து, பரம்பரை அறங்காவலர்களை நியமிக்காமல் கோவில் நிர்வாகத்திற்காக வெளியாட்களை நியமிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், கோவிலின் தற்போதைய பூசாரி முறையாக பூஜைகள் நடத்துவதில்லை என்றும், அவரை நீக்கிவிட்டு பரம்பரையாக வழிபட்டு வருபவர்களை அறங்காவலர்களாக நியமிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி கோஷமிட்டனர். வேறு மதத்தினரை அறங்காவலராக நியமிப்பதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இந்த முற்றுகை காரணமாக அறநிலையத் துறை அலுவலகத்தில் சிறிது நேரம் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
Next Story

