ராமநாதபுரம் குடிநீர் குழாய் இணைப்புக்கு கூடுதல் பணம் வசூலிப்பு
ராமநாதபுரம் மாவட்டம், அபிராமம் பேரூ ராட்சியில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்குவதற்கு கூடுத லாகப் பணம் கேட்பதாக பொது மக்கள் புகார் தெரிவித்தனர். இந்தப் பேரூராட்சியில் 2000-க்கும் மேற்பட்ட பொது மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள வீடுகளுக்கு குடி நீர் இணைப்பு வழங்க பேரு ராட்சி சார்பில் ரூ.8,500 வைப்புத் தொகை நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், வைப்புத் தொகையு டன் கூடுதலாக பணம் கொடுப்ப வர்களுக்கு மட்டுமே இணைப்பு வழங்கப்படுவதாகப் புகார் எழுந் துள்ளது. கூடுதல் பணம் வழங்காத சில விண்ணப்பதாரர்களுக்கு இணைப்பு வழங்காமல் செயல் அலுவலர் தாமதப்படுத்துவதா கவும், பேரூராட்சித் தலைவரை வீட்டுக்கு நேரில் சென்று பார்த்து வர வேண்டும் எனக் கூறுவதாக வும் பொதுமக்கள் புகார் தெரி வித்தனர். எனவே, மாவட்ட நிர்வாகம் ர்வாகம் தலையிட்டு அரசு நிர்ணயித்த வைப்புத் தொகையைச் செலுத் தும் விண்ணப்பதாரர்களுக்கு உரிய நேரத்தில் குடிநீர் இணைப்பு வழங்க பேரூராட்சி நிர்வாகத் துக்கு உத்தரவிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத் தனர்.
Next Story




