லாரி டிரைவரிடம் செல்போன் திருடிய வாலிபர் கைது

X
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் பாபு (வயது 38). இவர் சம்பவத்தன்று இரவு சேலம் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் பகுதியில் சாலையின் ஓரமாக லாரியை நிறுத்திவிட்டு தூங்கினார். மறுநாள் காலை பார்த்த போது அவர் வைத்திருந்த 2 செல்போன்கள் திருட்டு போய் இருந்தது. இதுகுறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரிடம் செல்போன் திருடியதாக அம்மாப்பேட்டையை சேர்ந்த விக்ரம் (22) என்பவரை கைது செய்தனர்.
Next Story

