ராமநாதபுரம் மீனவர்உடலை மீட்டு தர மனு

ராமநாதபுரம் மீனவர்உடலை மீட்டு தர மனு
X
பாம்பனை சேர்ந்த மீனவர் பகரை நாட்டில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது உயிரிழந்ததால் அவரின் உடலை மீட்க அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்
ராமநாதபுரம் அடுத்த பாம்பனை சேர்ந்த மீனவர் பகரை நாட்டில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது உயிரிழந்ததால் அவரின் உடலை மீட்க அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரம் தாலுகா, பாம்பன் ஊராட்சி, காமராஜ் நகரில் வசித்து வரும் S.சீமோன்சன் (வயது - 33) த/பெ. சூசைமரியான் என்பவர் இராமேஸ்வரம் பகுதியில் மீன்பிடி தொழில் இலங்கை கடற்படை நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தொடர் நெருக்கடிக்குள்ளாகி வருவதை தொடர்ந்து வேறு வழியின்றி வெளிநாடு சென்றாவது குடும்பத்தை பாதுகாக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் சமீப ஒரு மாதத்திற்கு முன்பு மீன்பிடி ஒப்பந்த கூலியாக பக்ரைன் சென்று தொழில் செய்து வந்த சூழலில் நேற்று கடலுக்கு சென்றுவிட்டு இன்று கரை திரும்பிய போது கடலில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். மேற்படி நபருக்கு செல்சியா (25) என்ற மனைவியும் 2.5 வயது மற்றும் 1 வயதில் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். வயதான தாய், தந்தையரும் உள்ளனர். எனவே இறந்து போன மீனவர் உடலை சொந்த ஊர் கொண்டு வந்து சேர்த்திடவும் மேற்படி நபரின் இறப்பால் நிராதரவான சூழலுக்கு தள்ளப்பட்டுள்ள ஏழை மீனவர் குடும்பத்திற்கு அரசின் நிவாரண உதவிகள் கிடைத்திட. வேண்டி இன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் முகாமில் கண்ணீர் மகிழ க்க வந்தனர்
Next Story