வானூர் அருகே மாயமான பெண் தற்கொலை

X
வானூர் அடுத்த ஒழிந்தியாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பாலு. கூலித்தொழிலாளி. இவரது மனைவி பவாணி, 55; இவர் கடந்த 19ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.மணிகண்டன், கிளியனூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, பவாணியை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று காலை ஒழிந்தியப்பட்டு பெரிய குளக்கரை அருகே உள்ள மரத்தில் தூக்கில் தொங்கியபடி பவாணி இறந்து கிடந்தார்.போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பவாணி இறப்பிற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

