சாமி தரிசனம் செய்வதை தடை செய்யக்கூடாது என மனு

X
வேடசந்தூர் அருகே டி.சுந்தரபுரி அண்ணா நகரில் பயன்பாடின்றி உள்ள நாடக மேடையில், கோவில் அமைத்து சாமி தரிசனம் செய்வதை தடை செய்யக்கூடாது என வலியுறுத்தி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணனிடம் மனு அளித்தனர். மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: வேடசந்தூர் தாலுகா பாடியூர் கிராமம், பி.கொசவபட்டி ஊராட்சி, டி.சுந்தரபுரி அண்ணா நகரில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடியிருந்து வருகின்றனர். எங்கள் பகுதியில் ரோட்டோரத்தில் விநாயகர் கோயில் அமைந்திருந்தது. தற்போது நடைபெற்ற ரோடு விரிவாக்கத்தின் போது கோவில் அகற்றப்பட்டது. அந்த கோவிலை எங்கள் ஊரில் 2010 ஆம் ஆண்டு கட்டப்பட்ட நாடக மேடை தற்போது பயன்பாடு இன்றி உள்ளது. அந்த இடத்தில் கோவிலை வைத்து வழிபட்டு வருகிறோம். இதனை வழிபட விடாமல் சிலர் கலெக்டருக்கு புகார் மனு அளிப்பதாக தகவல் வந்தது. நாங்கள் ஒட்டுமொத்த ஊர் மக்கள் சார்பில் வழிபடும் கோவிலை, அதே இடத்தில் வைக்க அனுமதிக்க வேண்டும்.என கலெக்டருக்கு அளித்த மனுவில் தெரிவித்து இருந்தனர்.
Next Story

