தென்காசியில் அமைச்சர் பொன்முடியை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்

X
பெண்களை இழிவாக பேசிய திமுக அமைச்சர் பொன்முடி மீது நடவடிக்கை எடுக்க கோரி தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக மகளிரணி சார்பில் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான செல்வ மோகன்தாஸ்பாண்டியன் தலைமையில் பாவூர்சத்திரம் பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் சண்முக சுந்தரம், இணை செயலாளர் முத்துலெட்சுமி, பொதுக்குழு உறுப்பினர் கசமுத்து, பாண்டிராஜ், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் முருகையா பாண்டியன், கார்த்திக்குமார், ஜனதா, சுப்பாராஜ், டாக்டர் கிருஷ்ணசாமி, நெல்லை முகிலன், சிவ சீத்தாராம் உள்ளிட்ட ஏராளமான அதிமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் பலர் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story

