கோவை: தையல் கலைஞர்கள் ஆர்ப்பாட்டம் !

கோவை:  தையல் கலைஞர்கள் ஆர்ப்பாட்டம் !
X
கோவை மாவட்ட தையல் கலைஞர்கள் சங்கத்தினர், நல வாரிய உறுப்பினர்களின் நீண்ட கால கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்ட தையல் கலைஞர்கள் சங்கத்தினர், நல வாரிய உறுப்பினர்களின் நீண்ட கால கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, 60 வயது நிறைவடைந்த நல வாரிய ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் 1200 ரூபாய் ஓய்வூதியத்தை 1500 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். தேர்தல் வாக்குறுதியில் அளித்தபடி அனைத்து ஓய்வூதியர்களுக்கும் 1500 ரூபாய் உயர்த்தி வழங்க வேண்டும் என்பதை அவர்கள் சுட்டிக்காட்டினர். மேலும், நல வாரிய உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் கல்வி, மகப்பேறு மற்றும் இறப்பு நிதி உதவியையும் உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தினர். கட்டுமானம் மற்றும் ஆட்டோ நல வாரியங்களுக்கு ஒரு மாதிரியாகவும், பிற நல வாரியங்கள் புறக்கணிக்கப்படும் நிலையையும் சுட்டிக்காட்டிய சங்கத்தினர், இந்த பாரபட்சமான போக்கு தொழிலாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தனர். எனவே, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி, அனைத்து வாரிசுகளுக்கும் பாகுபாடு இல்லாமல் ஒரே மாதிரியான உதவி நிதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தனர். கோரிக்கைகள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சங்கத்தினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Next Story