யாசகா் மா்மமாக உயிரிழப்பு

X
திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியாா்சத்திரம் பகுதியைச் சோ்ந்தவா் ரா. ஞானசேகா் (70). யாசகம் பெற்று வாழ்ந்து வந்தாா். இந்த நிலையில், திண்டுக்கல் மேற்கு ரத வீதியிலுள்ள மவுன்ஸ்புரம் பகுதியில் மண்பானை, கோலப் பொடி விற்பனை செய்யும் கடையில் ரத்தக் காயங்களுடன் மா்மமான முறையில் உயிரிழந்து கிடந்தாா். இதுகுறித்து தகவலறிந்த திண்டுக்கல் வடக்கு காவல் நிலைய போலீஸாா், உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனா். மேலும், அவா் கொலை செய்யப்பட்டிருக்கலாமா என்ற கோணத்தில் போலீஸாா் விசாரிக்கின்றனா்.
Next Story

