தென்காசி பராமரிப்பு இன்றி காணப்படும் பேருந்து நிலையம்

தென்காசி பராமரிப்பு இன்றி காணப்படும் பேருந்து நிலையம்
X
பராமரிப்பு இன்றி காணப்படும் பேருந்து நிலையம்
தென்காசி மாவட்டம் தென்காசி அருகிலுள்ள குத்துக்கல்வலசை ஊராட்சிக்கு உட்பட்ட தென்காசி - மதுரை சாலையில் அமைந்துள்ள சிவந்திநகர் பேருந்து நிலையமானது. தற்போது இந்தப் பேருந்து நிறுத்தும் இடம் முற்றிலும் முறையான பராமரிப்பு இல்லாமல் காணப்படுகிறது. பேருந்து நிலைய சுவற்றில் முழுவதும் விளம்பர சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு பேருந்து நிலையமானது போஸ்டர் நிலையமாக காட்சியளிக்கிறது. உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்து பார்வையிட்டு இதனை முறையாக பராமரிப்பு செய்து தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Next Story