கடையத்தில் மோட்டார் பைக் விபத்தில் காயமடைந்த பெண் பலி

X
தென்காசி மாவட்டம் கடையம் அருகே கடந்த சனிக்கிழமை 19 ஆம் தேதி மாதாபுரம் தாண்டி இரு பைக்குகள் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் நிலை தடுமாறியதில் பின்னால் அமர்ந்திருந்த வசிலா கீழே விழுந்ததில் தலையின் பின்புறம் காயம் ஏற்பட்டது இதைக் கண்ட பகுதி பொதுமக்கள் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர் . இந்நிலையில் இன்று காலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கடையம் போலீசார் முன்னால் பைக்கில் சென்ற ஜெஸ்டினிடம் என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story

