ஜெகதாபி அருகே சைக்கிளில் சென்றவர் மீது டூவீலர் மோதி விபத்து. ஒருவர் படுகாயம்.
ஜெகதாபி அருகே சைக்கிளில் சென்றவர் மீது டூவீலர் மோதி விபத்து. ஒருவர் படுகாயம். கரூர் மாவட்டம், வெள்ளியணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஓந்தம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி வயது 65 . இவர் ஏப்ரல் 20 ஆம் தேதி மதியம் 2 மணி அளவில், கரூர் - மணப்பாறை சாலையில் அவரது சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இவர் ஜெகதாபி பகுதியில் உள்ள சேகர் டீக்கடை எதிரே செல்லும் போது அதே சாலையில், ஜெகதாபி அருகே உள்ள பால்வார்பட்டி பகுதியைச் சேர்ந்த சுப்புராஜ் வயது 37 என்பவர் வேகமாக ஓட்டி வந்த டூ வீலர், பொன்னுச்சாமி ஓட்டிச் சென்ற சைக்கிள் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த பொன்னுச்சாமியை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சம்பவம் தொடர்பாக பொன்னுசாமி அளித்த புகாரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக டூவீலரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய சுப்புராஜ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வெள்ளியணை காவல்துறையினர்.
Next Story





