வாலிபரை தாக்கிய  மாஜி காதலியின் உறவினர்கள்

வாலிபரை தாக்கிய  மாஜி காதலியின் உறவினர்கள்
X
தக்கலை
குமரி மாவட்டம் மேக்காமண்டபம் பகுதியை சேர்ந்தவர் டார்வின் குமார் (28). வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவரை காதலித்ததாக கூறப்படுகிறது. பின்னர் காதல் முடிவு ஏற்பட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பின் டார்வின் குமார் வெளிநாட்டு சென்று விட்டார்.        ஆனால் இவருடைய பழைய காதலிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இதற்கு டார்வின் குமார் தான் காரணம் என பழைய காதலின் குடும்பத்தினர் நினைத்தனர். இந்த நிலையில் சமீபத்தில் டார்வின் குமார் வெளிநாட்டிலிருந்து விடுமுறையில் ஊருக்கு வந்தார்.       நேற்று அவர் அந்த பகுதியில் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த இரண்டு பேர் சரமாரியாக டார்வின் குமாரை தாக்கினர். படுகாயம் அடைந்தவரை  அக்கம்பக்கத்தினர் மீட்டு தக்கலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.       இது குறித்து டார்வின் குமார்  அளித்த புகாரின் பேரில் மேக்காமண்டபத்தைச் சேர்ந்த ஜெனிட்டோ (28) ராபர்ட்சன் (30) ஆகியோர் மீது கொற்றிக்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விசாரணையில் இவர்கள் டார்வின்  குமாரின் முன்னாள் காதலின் உறவினர்கள் என தெரிய வந்துள்ளது.
Next Story