திமுக மாணவரணி உறுப்பினர் சேர்க்கை:

X
தூத்துக்குடியில் திமுக மாணவரணி உறுப்பினர் சேர்க்கை பணியை அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார். திமுக தலைவர் - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, "இல்லந்தோறும் திமுக மாணவரணி" உறுப்பினர் சேர்க்கை பணியை தூத்துக்குடியில் வடக்கு மாவட்ட திமுக மாணவரணி சார்பில் மாவட்ட செயலாளர், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார். மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வழக்கறிஞர் சீனிவாசன் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தூத்துக்குடியில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட துணைச் செயலாளர் ஆறுமுகம், மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன் ஜேக்கப், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர்கள் கனகராஜ், ஆகாஷ் பாண்டியன், கோகுல்நாத், பிரதீபா, யோகலட்சுமி, மாநகர மாணவரணி அமைப்பாளர் வினோத் கண்ணன், மாநகர துணை அமைப்பாளர்கள் சத்யா ஈஸ்வரி, கார்த்திக், கந்தசாமி, பாலமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story

