தர்பூசணி விற்பனையும் குறைவு விலையும் சரிவு இழப்பீடு வழங்க கோரிக்கை

தாராபுரம்-அலங்கியம்: விற்பனையும் குறைவு.விலையும் சரிவு. தர்பூசணி விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்குமா வழங்க விவசாயிகள் கோரிக்கை!
திருப்பூர் மாவட்டம் தாராபுரம்:தர்பூசணியில் ஊசி மூலம் ரசாயனம் ஏற்றப்படுவதாக பரவிய வதந்தியால் விலை குறைந் துள்ளதுடன், விற்பனையும் சரிந்துள்ளதால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் மற்றும் வியாபாரிகளின் எதிர்பார்த் துள்ளனர்.  தர்பூசணி பழங்கள் கோடை காலத்தின் அற்புதம் என்று வர்ணிக்கப்படும் அளவுக்கு சிறப்பு வாய்ந்த தர்பூசணியின் நிலை இன்று பரிதாபமாக உள்ளது.  தர்பூசணியின் நிறம் மற்றும் சுவைக்காக ஊசி மூலம் ரசாயனம் கலக்கப்படுவதாக ஒரு வதந்தி பரவியது. இது கோடை சீசனைக்கருத்தில் கொண்டு தர்பூசணி சாகுபடி செய்த விவசாயிகளின் ஒரு டன் 14-ஆயிரம் வரை விற்பனையான  தர்பூசணி தற்போது ரூ.4 ஆயிரத்துக்கும்குறவாக விற்பனை செய்யப்படும் நிலை உருவா கியுள்ளது. அத்துடன் தர்பூசணி சாப்பிடுவ தற்கும் பொதுமக்கள் தயங்குவதால், விற்பனை மந்தமாகி விளைநிலங்களில் தேங்கும் நிலை உருவாகியுள்ளது. எனவே பாதிக்கப்பட்ட தர்பூசணி விவசாயிகளுக்கு இழப்பீடு  வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:- கோடை காலத்தில் தர்பூசணி, முலாம்பழம், வெள்ளரி, நுங்கு போன்ற குளிர்ச்சி தரும் பொருட்களை பொதுமக்கள் தேடித் தேடி சாப்பிடுவார்கள். அதற்கேற்ற வகையில் இந்தவகையான விளைபொருட்கள் வரத்தும் கோடைகாலத்தில் அதிக அளவில் இருக்கும். ஆனாலும் தேவை அதிகரிப்பால் நல்ல விலை கிடைக்கும் என்பதால் தர்பூசணி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டினர். இந்த நடப்பு ஆண்டில் வழக்கத்தை விட முன்னதாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்ததுடன், தர்பூசணி வரத்தும் அதிகரித்தது. இதனால் பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர்பானங்கள் விற்பனை பாதிப் புக்குள்ளானது எனவே தர்பூசணியில் ஊசி மூலம் ரசாயனம் கலக்கப்படுவதாக சாத்தியமற்ற ஒரு வதந்தி பரப்பப்பட்டது. இதுதிட்டமிட்டு நடத்தப்பட்டதா அல்லது தவறான புரிதலால் தற்செயலாக நடந்ததா என்பது தெரியவில்லை. ஆனால் இந்த வதந்தி வலைத்தளங்களின் மூலம் ராக்கெட் வேகத்தில் பரவியதால் தர்பூசணி விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.  இதனால் தர்பூசணி சாகுபடி செய்துள்ள விவசாயிகளின் வாழ்வாதாரம்  கேள்விக்குறியாக மாறியுள்ளது. தர்பூசணியின் நன்மைகள் குறித்தும் ரசாயனங்கள் கலக்கப்படுவதில்லை என்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் ஆதார விலை நிர்ணயம் செய்து தர்பூசணியை அரசே கொள்முதல் செய்ய வேண்டும்,அவற்றை கூட்டுறவு அங்காடிகள், ரேஷன் கடைகள் மூலம் விற்பனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம்.  அத்துடன் நடப்பு பருவத்தில் தர்பூசணி சாகுபடி செய்துள்ள அனைத்து விவசாயிகளுக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Next Story