எட்டுப்பட்டி கிராம மக்கள் நடத்திய பொங்கல் திருவிழா

X
சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூர் ஒன்றியம் வலைசப்பட்டியில் 8 ஆண்டுகளுக்கு பிறகு எட்டுப்பட்டி கிராம மக்கள் ஒன்றிணைந்து பொங்கல் திருவிழாவை விமர்சையாக கொண்டாடினர். இதில் வலசைப்பட்டி, ராஜாபட்டி, இரணிபட்டி, அம்மாபட்டி, பள்ளபட்டி தேத்தாம்பட்டி, கடமலைபட்டி, போன்ற எட்டுப்பட்டி கிராம மக்கள் ஒன்றிணைந்து முத்தாலம்மனுக்கு சின்னகருப்பு, பெரியகருப்பு, பொய்கால் குதிரை, குறவன் குறத்தி உள்ளிட்ட பல்வேறு வேடம் அணிந்து வலசைப்பட்டி கோவில் வீட்டில் ஒன்று கூடி அங்கிருந்து ஆட்டம், பாட்டத்துடன் ஊர்வலமாக புறப்பட்டு முத்தாலம்மன் கோவில் வந்து, பெண்கள் கும்மியடித்தும், வேடமிட்டவர்கள் ஆட்டம் பாட்டத்துடன் திருவிழாவை வெகுவிமர்சியாக கொண்டாடினர்.
Next Story

