அரசு பேருந்து மோதி முதியவர் உயிரிழப்பு

X
திருவாரூர் மாவட்டம், மூங்கில்குடியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 70). இவர் பிள்ளையார்பட்டியில் உள்ள தனியார் மஹாலில் தனது மகனுடன் இணைந்து வாட்ச்மேனாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் திருப்பத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து பிள்ளையார்பட்டிக்கு செல்வற்காக பேருந்து நிலையத்திற்க்குள் நடந்து சென்று கொண்டிருந்தபோது, காரைக்குடியிலிருந்து தேனிக்கு சென்ற அரசு பேருந்து பேருந்து நிலையத்திற்க்குள் வந்தபோது எதிர்பாராத விதமாக முதியவர் மீது மோதியது. இதில் முன்பக்க டயர் அவர் மீது ஏறி இறங்கிய நிலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Next Story

