மாநகரப் பகுதியில் இடி மின்னலுடன் கனமழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

X
தூத்துக்குடி மாநகர பகுதிகளில் கோடை வெயிலின் தாக்கத்தின் காரணமாக பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வந்த நிலையில் தற்போது மாநகரின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் இடி மின்னலுடன் மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழ்நிலை நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி தூத்துக்குடி மாநகர பகுதிகளில் கடந்த 10 நாட்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது இதன் காரணமாக பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வந்தனர் இந்நிலையில் இன்று தூத்துக்குடி மாநகரில் காலை முதலே வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்பட்டது இந்நிலையில் இன்று மாலை சுமார் ஐந்து முப்பது மணி அளவில் மாநகர பகுதி முழுவதும் பலத்த இடி மின்னல் மற்றும் காற்றுடன் பரவலாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது இதன் காரணமாக ஓரளவு வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழ்நிலை நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
Next Story

