பேராவூரணியில் நெடுஞ்சாலைத்துறை தரக்கட்டுப்பாடு ஆய்வகம் திறப்பு

பேராவூரணியில் நெடுஞ்சாலைத்துறை தரக்கட்டுப்பாடு ஆய்வகம் திறப்பு
X
திறப்பு விழா
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உட்கோட்ட தரக்கட்டுப்பாட்டு ஆய்வக கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. எம்எல்ஏ நா.அசோக்குமார் தலைமை வகித்து புதிய தரக்கட்டுப்பாட்டு ஆய்வக கட்டிடத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் தஞ்சை தெற்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் சுப.சேகர், சேதுபாவாசத்திரம் ஒன்றியக்குழு முன்னாள் தலைவர், ஒன்றியச் செயலாளர்கள் அன்பழகன், இளங்கோவன், ரவிச்சந்திரன், பொதுக்குழு உறுப்பினர் அப்துல் மஜீத்,நகரச் செயலாளர் சேகர், நெடுஞ்சாலைத்துறை உதவிக் கோட்டப் பொறியாளர் விஜயகுமார், உதவிப்பொறியாளர் ஜாஹிர்உசேன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story