மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்த இருவர் கைது

X
Komarapalayam King 24x7 |22 April 2025 7:22 PM ISTகுமாரபாளையத்தில் அதிக விலைக்கு மதுபானம் விற்பனை செய்த இருவர் கைது
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் அரசு மது அதிக விலைக்கு விற்பதாக குமாரபாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ. தங்கவடிவேல் தலைமையில் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். சரவணா தியேட்டர், ஆனங்கூர் பிரிவு பகுதியில் அதிக விலைக்கு மது விற்பதாக அறிந்து, நேரில் சென்றனர். அங்கு அதிக விலைக்கு அரசு மது விற்றுக்கொண்டிருந்த பஷரப்புல்லா, 23, வேணுகோபால், 54, ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
Next Story
