இளநீர் வியாபாரி விபத்து புண் வலி தாங்காமல் விஷமருந்தி சாவு

X
Komarapalayam King 24x7 |22 April 2025 7:24 PM ISTகுமாரபாளையத்தில் இளநீர் வியாபாரி விபத்து புண் வலி தாங்காமல் விஷமருந்தி இறந்தார்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் கத்தேரி பிரிவு பகுதியில் இளநீர் வியாபாரம் செய்து வந்தவர் முத்துசாமி, 56. இவரது மனைவி பாப்பாத்தி, 45. இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக, பாப்பாத்தி, காளியண்ணன் நகர் பகுதியிலும், முத்துசாமி கத்தேரி பிரிவு பகுதியிலும் நான்கு ஆண்டுகளாக தனித்தனியாக வசித்து வந்தனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன், சாலை விபத்தில் இரு கால்களிலும் பலத்த காயமடைந்த முத்துசாமி, சிகிச்சை பெற்று வந்தார். வலி தாங்காமல் நேற்றுமுன்தினம் கத்தேரி பிரிவு பகுதியில் மாலை 05:30 மணியளவில் மயங்கி கிடந்தார். இவரை பாப்பாத்தியும், அவரது மகனும் தனியார் ஆம்புலன்ஸ் மூலம், ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இவர் சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் இரவு 07:45 மணியளவில் இறந்தார். இவர் வலி தாங்கமுடியாமல் ஏதோ விஷமருந்தியுள்ளார் என டாக்டர் கூறினார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story
