மசினகுடி பொக்காபுரம் சாலையில் யானை தாக்கி பெண் ஒருவர் பலி...

மசினகுடி பொக்காபுரம் சாலையில் யானை தாக்கி பெண் ஒருவர் பலி...
X
வனத்துறை தீவிர விசாரணை
மசினகுடி பொக்காபுரம் சாலையில் யானை தாக்கி பெண் ஒருவர் பலி... இயற்கை எழில் கொஞ்சும் நீலகிரி மாவட்டம் சுமார் 55 சதவீதம் பகுதியை கொண்ட மாவட்டமாகும். இந்த வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, கரடி, மான், காட்டுமாடு உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதிகளில் நிலவி வரும் வறட்சியின் காரணமாக வனவிலங்குகளுக்கு தேவையான உணவு மற்றும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் வனவிலங்குகள் சாலையோரங்களில் உலா வர துவங்கியுள்ளன. இந்நிலையில் முதுமலை புலிகள் காப்பகம் மசினகுடி வனச்சரக்கத்திற்குட்பட்ட பொக்காபுரம் சாலையில் இரு சக்கர வாகனத்தில் பயணித்த சரசு என்பவரை யானை தாக்கியதில் படுகாயம் அடைந்தவரை உதகை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சை பெற்று வந்த பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Next Story