ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் தொடங்க வேண்டும் என லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்.

X
Paramathi Velur King 24x7 |22 April 2025 7:54 PM ISTஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் தொடங்க வேண்டும் என லாரி உரிமையாளர்கள் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பரமத்தி வேலூர்,ஏப். 22: நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுக்கா லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தின் செயல்பாடுகளின் போது சரக்கு மற்றும் ட்ரையலர் வாகனங்கள் முதன்மை வழங்குநர்களாக இருந்த வந்தனர். சரக்கு போக்குவரத்தில் தொடர்ந்து நீடித்து வரும் கடும் வீழ்ச்சியை சீரமைக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பரமத்தி வேலூர் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் செந்தில்குமார் தலைமை தங்கினார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஸ்டெர்லைட் ஆலையை கண்டித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் தற்காலிகமாக மூடுவதாக அந்நிறுவனம் அறிவித்தது. ஆலை மூடப்பட்டதால் தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடக மாநில லாரி ஓட்டுநர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் கடுமையான தொழில் பாதிப்பு ஏற்பட்டது. ஆலையின் செயல்பாட்டின் போது தினசரி 1000 லாரிகள் இயக்கப்பட்டு முக்கிய வாழ்வாதாரத்தை வழங்கி வந்தது. இந்நிலையில் 600 க்கு மேற்பட்ட லாரி உரிமையாளர்கள் தாங்களுக்கு வேறுவழியின்றி ஓட்டுநர்களாக மாறவேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விட்டதாக தெரிவித்தனர். இதில் ஓட்டுநர்கள், உதவியாளர்கள், மற்றும் அவர்களது குடும்பத்தினர் வேலையில்லா திண்டாட்டத்தாலும், பல்வேறு தொடர் தொழில்கள் மூடப்படுவதால் நிதி நெறுக்காடியாலும் வாழ்கை சுமையை தாங்கமுடியாமல் போராடி வருகின்றனர். ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளதால் மாவட்டத்தில் தினசரி ரூ.10 கோடிக்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ஆயிரக்கணக்கானோருக்கு கடனாளியாகி உள்ளதாகம்,மெக்கானிக் கடைகள், டீ கடைகள் மற்றும் பஞ்ர் பழுது பார்க்கும் கடைகள் போன்ற சிறு சிறு வணிகங்கள் குறைந்த போக்குவரத்து நடவடிக்கையால் குறிப்பிடதக்க வருமான இழப்பை சநதித்து வருகின்றன. தொடந்து சரக்கு இயக்கத்தில் ஓரு நிலையான சரிவு, நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள், போக்குவரத்து பரிவர்த்தனை குறைவு மற்றும் குறைந்த வருமானம், சரக்கு கட்டணங்கள் குறைவு ஆகியவை தொடர்வதால் தொழில் துறை வருவாய் இழப்பு அதிகரித்து வருகிறது. குறைக்கப்பட்ட சரக்கு போக்குவரத்து சேவைகள் மூலம் மாநிலங்களுக்கு இடையேயான வர்த்தகம் மற்றும் நிலையான தொழில் பரிவர்த்தனை ஆகியவற்றை நம்பியிருக்கும் தொழில்களுக்கு இடையறு ஏற்படுத்தி, வருவாய் குறைவையும், பாதிக்கப்படும் சூழலை உருவாக்கியுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்க்கு தவறான தகவல் திட்டமிட்டு பரப்பபட்டது அல்லது கண்ணுக்கு தெரியாத சில தீய சக்திகளின் அழுத்தங்கள் காரணமாக இருக்கலாம் என பரமத்தி வேலூர்; தாலுக்கா லாரி உரிமையாளர்கள் சங்கம் தொரிவித்துள்ளது. இதனால் ஆலையை மீண்டும் அரசே ஏற்று இயக்கி ஆலையின் செயல்பாடுகளை கண்காணிக்க நிபுணர் குழுவை அமைத்து ஆலையை மீண்டும் திறக்கவேண்டும் என்று தமிழகஅரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுற்றுசுழல் பாதிப்புகளை குறைக்க மேம்பட்ட தொழில் நுட்பத்தை பயன்படுத்தி ஆலையை கடுமையான மேற்பார்வை குழுவின் கீழ் இயக்க செய்து அதற்க்கு ஒரு சிறப்பு அரசு ஆணை (GO) இயற்றப்பட வேண்டும். ஸ்டெர்லைட் ஆலை மூடல் என்பது போக்குவரத்து துறையை மட்டுமல்ல மாவட்டத்தில் உள்ளுர் பொருளாதாரத்தையும் சீர்குலைத்துள்ளது. ஏறக்குறைய 6500 லாரிகள் ஆலையின் செயல்பாடுகளை நம்பியிருந்த நிலையில் ஸ்டெர்லைட் காப்பர் உற்பத்தி செய்யும் கிட்டதட்ட 9000 டன் பொருட்களை கொண்டு செல்ல தினசரி 430 லாரிகள் தேவைபடும் நிலை இருந்து வந்துள்ளது. தற்போதைய ஆலை மூடல் நிலை என்பது ஆயிரக்கணக்கான குடுபம்பங்களையும் அவற்றின் வளர்ச்சி மற்றும் பொருளாதார காரணிகளை அழித்துள்ளதுடன் கடுமையான இழப்புகளை நீண்ட காலமாக ஏற்படுத்தியுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பது என்பது லாரி ஓட்டுநர்கள், உதவியாளர்கள் மற்றும் உள்ளுர் வணிகங்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும். இதுதவிர பொருளாதாரத்தை உயர்த்தும் மற்றும் மாநில வாருவாயில் கணிசமாக பங்களிக்கும், ஆலையை புதுப்பிக்கவும், உலக அளவில் தாமிர சரக்கு தேவையை மீட்டெடுக்கவும், தளவாடங்கள் மற்றும் உள்ளுர் பொருளாதாரங்கள் மேலும் சேதமடைவதை தடுக்கவும் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பரமத்தி வேலூர் தாலுக்கா லாரி உரிமையாளர்கள் சங்கம் வலியுறுதுகிறது. உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் லாரி உரிமையாளர்கள்,ஓட்டுநர்கள்,உதவியாளர்கள், உட்பட அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
Next Story
