கிருஷ்ணகிரியில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி.

கிருஷ்ணகிரியில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி
கிருஷ்ணகிரி பழைய பேட்டை தர்மராஜா கோவில் தெருவில் உள்ள திரௌபதி அம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் அக்னி வசந்த மகோத்சவ திருவிழா கடந்த ஏப்.2-ம் தேதி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி பாண்டவர் பிறப்பு, கிருஷ்ண அவதாரம் உள்ளிட்ட நாடகங்கள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் துரியோதனன் படுகளம் நிகழ்வு நேற்று நடைபெற்றது. தெருக்கூத்து கலைஞர்களால் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியை திராளான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
Next Story