வழித்தடம் விவகாரம், முத்தரப்பு பேச்சுவார்த்தை

X
Komarapalayam King 24x7 |22 April 2025 8:30 PM ISTகுமாரபாளையத்தில் வழித்தடம் விவகாரம் சம்பந்தமாக முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி, வீரப்பம்பாளையம், வேளாங்காடு பகுதியில் ஒரு சமுதாயத்தினர், அவர்களது குடும்பங்களை சேர்ந்த சுமார் 100க்கும் மேற்பட்ட இறந்தவர்கள் நினைவாக, மற்றொரு சமுதாய நபர் ஒருவரின் பட்டா நிலத்தில் நினைவுக்கல் வைத்து வழிபட்டு வந்தனர். இதற்கு நில உரிமையாளர் மற்றும் அவரது சமுதாயத்தினர், கல் வைத்த நபர்களிடம் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். நட்டு வைத்த நினைவு கற்களை அகற்றுமாறு போலீசில் புகார் கொடுத்து, அந்த பிரச்னை தீராத நிலையில், மீண்டும் அதே இடத்தில் நினைவுக்கல் வைத்து வழிபடுகிறோம் என்று கூறி, 75க்கும் மேற்பட்டவர்கள் திரண்டனர். இது சம்பந்தமாக திருச்செங்கோடு ஆர்.டி.ஒ. அலுவலகத்தில், ஆர்.டி.ஓ. சுகந்தி தலைமையில் பல கட்ட பேச்சுவார்த்தையில் சுமுக தீர்வு ஏற்பட்டது. ஆனால் இடம் ஆய்வுக்கு சென்ற அதிகாரிகள் வசம் ஒரு தரப்பினர் தங்கள் ஆட்சேபனையை தெரிவித்தனர். நேற்று மீண்டும் சமரச பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களுக்கு நில அளவீடு செய்து, அவர்கள் கேட்டபடி வழங்கப்பட்டது. தற்போது ஒரு தரப்பினர் தங்கள் பகுதிக்கு செல்ல வழித்தடம் கேட்டு வருகின்றனர். இது குறித்து ஆர்.டி.ஓ. சுகந்தி, தாசில்தார் சிவகுமார் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். இதன் பின் தாசில்தார் அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. இதுகுறித்து வட்டாட்சியர் சிவக்குமார் கூறும் பொழுது இன்று நடைபெற்றது முத்தரப்பு பேச்சு வார்த்தை இல்லை நீதிமன்ற உத்தரவின் பேரில் இரு தரப்பினரிடம் இருந்து விளக்கம் கேட்டு கடிதம் பெறப்பட்டுள்ளது இது குறித்து மேல் நடவடிக்கை வருவாய் கோட்டாட்சியர் மேற்கொள்வார் என தெரிவித்தார். இது குறித்து விவசாயி விஸ்வநாதன் கூறியதாவது: ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் வழித்தடம் கேட்டு வருகின்றனர். காலம் காலமாக அவ்வழியாக சென்று வருதாகவும் கூறி வருகின்றனர். இது தவறான தகவல். இது குறித்து ஆர்.டி.ஓ. சுகந்தி, தாசில்தார் சிவகுமார் ஆகியோர் நேரில் வந்து ஆய்வு செய்தனர். தாசில்தார் அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தை முடிவில், நீங்கள் கேட்கும் வழித்தடம் ஏற்கனவே சென்று வந்ததுதான் என ஆதாரத்துடன் எழுதி தர சொல்லி கேட்டனர். அதற்கு உரிய ஆதாரம் நாங்கள் கொடுத்து உள்ளோம். மற்றொரு தரப்பினர் ஆதாரம் இல்லை என கொடுத்துள்ளனர். இதன் அறிக்கை ஆர்.டி.ஒ.க்கு சமர்ப்பிக்கப்பட்டு, மாவட்ட கலெக்டர் இதுகுறித்து முடிவு செய்து கூறுவார். இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
