தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு

X
தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கிவரும் தன்னார்வ பயிலும் வட்டம் மூலமாக, TNPSC & TNUSRB போன்ற போட்டித் தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. இதில் தஞ்சாவூர் மாவட்டத்தில் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் அதிக அளவில் பங்கு பெற்று பயனடைந்து வருகின்றனர். தற்போது TNPSC தொகுதி I (முதல்நிலைத் தேர்வு) மற்றும் தொகுதி IV தேர்விற்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் காவல் சார்பு ஆய்வாளர்கள் (SI) பணியிடத்திற்கான அறிவிக்கையினை டி.என்.யூ.எஸ்.ஆர்.பி வெளியிட்டுள்ளது. இத்தேர்விற்குத் தயாராகி வரும் போட்டித் தேர்வாளர்கள் பயன்பெறும் வகையில், கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், 24.04.2025 (வியாழக்கிழமை) முதல் தொடங்கப்படவுள்ளது. இப்பயிற்சி வகுப்பு திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10.30 மணி முதல் 01.30 மணி வரையில் நடைபெறவுள்ளது. இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரில் தொடர்பு கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு 04362-237037 என்ற அலுவலகத் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
Next Story

