சென்னை எழிலகத்தை முற்றுகையிடச் சென்ற மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டதை கண்டித்து விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் மாற்றுத்திறனாளி சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடு

X
தமிழக அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சென்னை எழிலகத்தை முற்றுகையிடச் சென்ற மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டதை கண்டித்து விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் மாற்றுத்திறனாளி சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதிலும் இருந்து மாற்றுத்திறனாளி சங்கத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மற்ற மாநிலத்தை போன்று மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை 5000 மற்றும் கடும் மாற்று திறனாளிகளுக்கு பத்தாயிரம் படுத்த படுக்கையாக உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு 15,000 உயர்த்தி வாங்கிட கோரியும் காரணம் இன்றி உதவித்தொகை நிறுத்தப்பட்டவர்களுக்கும் ஒன்றை ஆண்டு காலமாக உதவி துவக்கி விண்ணப்பித்து காத்திருப்பவர்களுக்கு உடனடியாக உதவித்தொகை வழங்கிட வேண்டும் 18 வயதுக்கு கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வயதுவரம்பு குழுவை கலைத்துவிட்டு அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவித்தொகை வழங்கிய வலியுறுத்தி உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி சென்னை எழிலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்ற மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களை விடுவிக்க கோரி விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பஞ்சு மார்க்கெட் பகுதியில் மாற்றுத்திறனாளி சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story

