சிவகாசி அருகே ஏழ்மை நிலையில் உள்ள பள்ளி மாணவனின் கல்வி செலவிற்கும் , நர்சிங் படிக்கும் மாணவியின் மருத்துவச் செலவிற்கும் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி நிதி உதவி வழங

X
சிவகாசி அருகே ஏழ்மை நிலையில் உள்ள பள்ளி மாணவனின் கல்வி செலவிற்கும் , நர்சிங் படிக்கும் மாணவியின் மருத்துவச் செலவிற்கும் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி நிதி உதவி வழங்கினார் ... விருதுநகர் மாவட்டம் சிவகாசி சட்டமன்றத் தொகுதி சாணார்பட்டியை சார்ந்த... மாற்றுத்திறனாளி பால்பாண்டி- பாண்டிலட்சுமி தம்பதியினரின் மகன் 10ஆம்வகுப்பு பயிலும் ராஜபாண்டியனுக்கு கல்வி உதவித்தொகையாக அதிமுக முன்னாள் அமைச்சரும் , விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான ராஜேந்திர பாலாஜி ரூபாய் 25ஆயிரம் நிதியுதவி வழங்கினார்... அதே போல் சிவகாசி சட்டமன்றத் தொகுதி நந்தவனத்தெருவை சார்ந்த கூலித்தொழிலாளியான முத்துராமலிங்கம் நாகலட்சுமி தம்பதியினரின் மகள் நர்சிங் பயிலும் மாணவி சுப்புலட்சுமி உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் அவரின் மருத்துவ செலவிற்கு ரூபாய் 25ஆயிரம் நிதியுதவியாக வழங்கினார்... பின்னர் உடல்நிலை பாதிக்கப்பட்ட மாணவி சுப்புலட்சுமிக்கு பிசியோதெரபி செய்வதற்காக பிசியோதெரபி நிபுணரை தொலைபேசியில் அழைத்து பேசிய ராஜேந்திரபாலாஜி அந்த மாணவிக்கு பிசியோதெரபி செய்யுமாறும், அதற்கு உண்டான செலவை தன்னிடம் வாங்கிக் கொள்ளுமாறும் தெரிவித்த ராஜேந்திர பாலாஜி செயலே கண்டு அந்த மாணவியின் குடும்பத்தினர் நெகிழ்ச்சி அடைந்தனர்.
Next Story

