தேன்கனிக்கோட்டை:மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

X
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இந்திய கம்யூ னிஸ்டு கட்சி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு தளி ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். திருப்பூர் எம்.பி. சுப்பராயன், மாநில செயற்குழு உறுப்பினர் ரவி, கண்டன உரையாற்றினர். இதில் திரளானோர் கலந்து கொண்டு தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கான நிதியை தமிழகத்திற்கு வழங்காமல் இழுத்தடிக்கும் மத்திய அரசை கண்டித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
Next Story

