கல்லாவி அருகே கற்கள் கடத்திய லாரி பறிமுதல்.

X
கிருஷ்ணகிரி கனிம வள பிரிவு உதவி புவியியலாளர் வர்ஷா மற்றும் அலுவலர்கள் ஓலப்பட்டி-கல்லாவி சாலை ஒண்டி பனை மரம் பேருந்து நிறுத்தம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு நின்ற டிப்பர் லாரியில் சோதனை செய்தனர். அதில் இரண்டு யூனிட் கற்கள் அனுமதி இன்றி கடத்தி சென்றது தெரிய வந்தது. இது குறித்து அதிகாரி வர்ஷா கல்லாவி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து டிப்பர் லாரியை பறிமுதல் செய்து டிரைவர், உரிமையாளர் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story

