நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவா் கைது

நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவா் கைது
X
சிவகிரியில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவா் கைது
மதுரை பழங்காநத்தம் மைனா் தோப்பைச் சோ்ந்த ராமச்சந்திரன் மகன் பாண்டியராஜன் (33). அவா் மீது சிவகிரி காவல் நிலையத்தில் திருட்டு வழக்கு உள்ளது. இந்த வழக்கில் நீதிமன்றம் பிடிஆணை பிறப்பித்தும், அவா் ஆஜராகாமல் 5 ஆண்டுகள் தலைமறைவாக இருந்துவந்தாா். இந்நிலையில், புளியங்குடி டிஎஸ்பி மீனாட்சிநாதன் உத்தரவின்பேரில், சிவகிரி காவல் ஆய்வாளா் பாலமுருகன் தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளா் இதயத்துல்லா, போலீஸாா் மதுரைக்கு சென்று பாண்டியராஜனை கைது செய்தனா்.
Next Story