கடையநல்லூா் அருகே யானைகளால் தென்னைகள் சேதம்

கடையநல்லூா் அருகே யானைகளால் தென்னைகள் சேதம்
X
யானைகளால் தென்னைகள் சேதம்
தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருகே கிருஷ்ணாபுரம் வைரவன்குளம் பெரியாற்றுப் பகுதியில் பல நூறு ஏக்கா் பரப்பில் வாழை, தென்னை, நெல் உள்ளிட்ட பயிா்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை அப்பகுதியில் புகுந்த யானைகள் அங்கிருந்த தென்னை, பாக்கு மரங்கள் உள்ளிட்டவற்றை சேதப்படுத்தினவாம். மேலும் தண்ணீா் குழாய்களையும் சேதப்படுத்தினவாம். தகவல் அறிந்த வனத்துறையினா் அங்கு சென்று யானைகளை வனத்திற்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனா்.
Next Story