கோவை: காதலியை தாக்க முயன்ற காதலன் !

X
கோவை மாவட்டம் பொள்ளாச்சி தனியார் மருத்துவமனையில் பயிற்சி செவிலியராக பணியாற்றும் திண்டுக்கல்லைச் சேர்ந்த பெண் ஒருவர், அதே பகுதியைச் சேர்ந்த ஜோசப்பை(21) காதலித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக அவனை தவிர்த்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஜோசப், தனது நண்பர் முனி செல்வத்துடன்(20) மருத்துவமனைக்குள் நேற்று பட்டாக் கத்தியுடன் புகுந்து காதலியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றியதும், மறைத்து வைத்திருந்த கத்தியால் தாக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. அருகில் இருந்தவர்கள் தடுத்ததால் இருவரும் தப்பி ஓடிய நிலையில், பொதுமக்கள் அவர்களைப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மகாலிங்கபுரம் போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story

