அமைச்சர் பொன்முடிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

X
சிவகங்கை அரண்மனை வாசல் பகுதியில் பெண்கள் குறித்து அவதூறாகவும், ஆபாசமாகவும் பேசிய திமுக அமைச்சர் பொன்முடியை கண்டித்து சிவகங்கை மாவட்ட அஇஅதிமுக மகளிர் அணி செயலாளர் ஜாக்குலின் அலெக்ஸாண்டர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், திமுக தொண்டர்கள் மட்டுமல்ல திமுக அமைச்சர்களாக உள்ள பலர் அநாகரிகமாக பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இப்படி மோசமாக நடந்து கொள்ளும் அமைச்சர்களை கண்டிக்க முடியாத நிலையில் முதல்வர் ஸ்டாலின் உள்ளார். இதையெல்லாம் முடிவு கட்ட வருகின்ற சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அஇஅதிமுக ஆட்சி அமைய வேண்டும் என்று பேசினார். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான மகளிர் அணி நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டு பொன்முடிக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
Next Story

