அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை கலெக்டர் ஆய்வு

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை கலெக்டர் ஆய்வு
X
கொல்லங்கோடு
குமரி மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் கீழ் செயல்பட்டு வரும் கொல்லங்கோடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா, நேற்று நேரில் பார்வையிட்டார். பின்னர் அவர் கூறுகையில்:-  கர்ப்பிணி பெண்களுக்கு செவ்வாய்க்கிழமைகளில் வழங்கப்படும் சிறப்பு பரிசோதனைகள் மற்றும் பிற சுகாதார சேவைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அங்கு கர்ப்பக்கால பரிசோதனைக்காக காத்திருந்த கர்ப்பிணிப் பெண்களிடம் கலந்துரையாடப்பட்டது. அவர்களிடம் பாதுகாப்பான பிரசவத்திற்கான வழிமுறைகள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் சேவைகள் குறித்து விழிப்புணர்வு வழங்கப்பட்டது.           தாய்மார்கள்  மருத்துவர்களின் அறிவுரைகள் பெற்று அதன்படி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற வேண்டும். என கூறினார்.  நடைபெற்ற ஆய்வில் மாவட்ட சுகாதார அலுவலர் மருத்துவர் பிரபாகரன், மருத்துவர்கள், செவிலியர்கள், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
Next Story