ரேஷன் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

ரேஷன் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
X
ஆர்ப்பாட்டம்
உளுந்துார்பேட்டையில் தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளர் சங்கம் சார்பில் வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது. தாலுகா அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட பொருளாளர் ராஜகோபால் தலைமை தாங்கினார். துணைச் செயலாளர் ரமேஷ்குப்தா, வட்ட தலைவர் முருகவேல், செயலாளர் செந்தில்குமார், துணைத்தலைவர் சுரேஷ்குமார், திருநாவலுார் ஒன்றிய தலைவர் செல்வராஜ், வட்ட துணை பொருளாளர் ராமச்சந்திரன், மகளிரணி வட்ட தலைவர் குமாரி, செயலாளர் கலைமணி, பொருளாளர் மஞ்சு, வட்ட துணைச் செயலாளர் தண்டபாணி உட்பட பலர் பங்கேற்றனர்.
Next Story