கோடை விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகளின் வசதிக்காக ஏற்காட்டுக்கு பஸ்கள் கூடுதல் நடை

கோடை விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகளின் வசதிக்காக ஏற்காட்டுக்கு பஸ்கள் கூடுதல் நடை
X
அதிகாரிகள் தெரிவித்தனர்
ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இவர்கள் அண்ணா பூங்கா, ஏரி பூங்கா, படகு இல்லம், லேடிஸ் சீட், பக்கோடா பாயின்ட், ரோஜா தோட்டம், சேர்வராயன் கோவில், தாவரவியல் பூங்கா, ஐந்திணை பூங்கா உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றி பார்த்து வருகின்றனர். இதற்கிடையே தற்போது பெரும்பாலான பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டதால், வெயிலின் தாக்கத்தில் இருந்து தற்காத்து கொள்வதற்காக மக்கள் சுற்றுலாத்தலங்களுக்கு செல்ல உள்ளனர். இதனால் சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காட்டுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் சேலத்தில் இருந்து ஏற்காட்டுக்கு பஸ்களை கூடுதல் நடை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:- சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஏற்காட்டுக்கு தினமும் ஏற்காடு அடிவாரம் வழியாக 8 பஸ்களும், குப்பனூர் வழியாக 3 பஸ்களும் இயக்கப்பட்டு வருகின்றன. மொத்தம் 118 நடைகள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் கோடை விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகள் வசதிக்காக ஏற்காட்டுக்கு பஸ்கள் கூடுதல் நடை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. முதற்கட்டமாக வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுதலாக 10 நடைகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளன. மேலும் சுற்றுலா பயணிகளின் வருகையை பொறுத்து மற்ற நாட்களில் கூடுதல் நடை இயக்கப்படும். மேலும் தற்போது பேக்கேஜ் பஸ்கள் இயக்குவதற்கு திட்டமிடப்படவில்லை. கோடை விழாவையொட்டி அந்த பஸ்கள் இயக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Next Story