மாணவிகளுக்கு பாராட்டு விழா

மாணவிகளுக்கு பாராட்டு விழா
X
விழா
கடுவனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பயின்ற எட்டாம் வகுப்பு மாணவிகள் பூர்விகா சரவணன், பூர்விகா முருகன், சத்யபிரியா, ஷாலினி ஆகிய 4 மாணவிகள் தேசிய திறனாய்வு தேர்வு எழுதி வெற்றி பெற்றனர். இவர்களுக்கு பள்ளி சார்பில் பாராட்டு விழா நடந்தது. விழாவிற்கு, பள்ளியின் தலைமை ஆசிரியர் லட்சுமி தலைமை தாங்கினார்.தி.மு.க., மாவட்ட துணைச் செயலாளர் அண்ணாதுரை, சங்கராபுரம் தெற்கு ஒன்றிய செயலாளர் துரைமுருகன், ஊராட்சி தலைவர் ஏழுமலை முன்னிலையில் மாணவிகளுக்கு சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பங்கேற்றனர்.
Next Story