சைபர் கிரைம் குற்றம் குறித்த துண்டு பிரசுரம்

X
நவீன மயமாக்கப்பட்டு வரும் உலகில் மக்களின் வளர்ச்சிக்காக புதிதாக பல்வேறு இணைய கண்டுபிடிப்புகள் உருவாக்கப்படுகின்றது. ஆனால் மக்களின் வளர்ச்சிக்காக கண்டுபிடிக்கப்பட்ட கண்டுபிடிப்புகள் பணம் பறித்தல் மற்றும் பெண்களை தவறாக சித்தரிப்பது என இணைய குற்றத்திற்காக அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது போன்று தொடர்ந்து நடைபெற்று வரும் சைபர் குற்றம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் அவ்வப்போது சைபர் க்ரைம் போலீசாரால் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சைபர் கிரைம் குற்றம் குறித்த விழிப்புணர்வு மற்றும் குழந்தை திருமணம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பெண்களுக்கு 18 வயதிற்கு மேலும் ஆண்களுக்கு 21 வயதிற்கு மேலும் தான் திருமணம் செய்ய வேண்டும் அதற்கு குறைந்த வயதில் திருமணம் செய்தால் குழந்தை திருமணம் சட்டத்திலும் போக்ஸோ வழக்கிலும் கைது செய்யப்படுவார்கள் என்று கூறினார். சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் விக்டோரியா லூர்து மேரி அறிவுரையின்படி சிறப்பு சார்பு ஆய்வாளர் ஈஸ்வரி, மகாலட்சுமி, மற்றும் தலைமை காவலர் லட்சுமணன் ஆகியோர் இணைந்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்தி துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
Next Story

