கரூரில்,வாகன பதிவெண் இல்லாத டூவீலர்கள் பறிமுதல். காவல்துறை நடவடிக்கை.
கரூரில்,வாகன பதிவெண் இல்லாத டூவீலர்கள் பறிமுதல். காவல்துறை நடவடிக்கை. கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின் பேரில், கரூர் நகர துணை காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் தலைமையில், நேற்று இரவு கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானா பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது டூவீலர்களின் முகப்பு பகுதியில் பதிவெண் இல்லாத அனைத்து வாகனங்களையும் தடுத்து நிறுத்தினர். சுமார் 30க்கும் மேற்பட்ட வாகனங்கள் தேக்கி நிறுத்தப்பட்டது. சம்பந்தப்பட்ட இடத்திற்கு கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல் வருகை தந்தார். அப்போது வாகன ஓட்டிகளிடம் பேசிய எஸ் பி, சட்டப்படி டூவீலர்களில் வாகன பதிவு எண் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். இது விபத்தில் சிக்கினாலும், வாகனங்கள் களவாடப்பட்டாலும், குற்ற செயல்களில் வாகனங்களை பயன்படுத்தினாலும் சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற்கு அவசியம் பதிவு செய்திருக்க வேண்டும் எனக்கூறிய அவர், பிடிபட்ட அனைத்து வாகனங்களுக்கும் தலா ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, பதிவு எண்களை வாகனங்களில் பதிவு செய்த பிறகு வாகனங்களை விடுவிக்க வேண்டும் என உத்தரவிட்டார். இதன் அடிப்படையில் அனைத்து வாகனங்களுக்கும் போக்குவரத்து காவல்துறையினர் அபராதம் விதிக்கப்பட்டு, உடனடியாக புதிய பதிவு எண்கள் வாகன ஓட்டிகள் பதிவு செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.
Next Story







