கோவை: நீட் தேர்வு எதிர்ப்பு போஸ்டர்களால் பரபரப்பு !

நீட் தேர்வு விவகாரத்தில் அதிமுகவின் இரட்டை வேடத்தை விமர்சித்து, கோவை மாநகர் மாவட்ட திமுக மாணவர் அணி சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
நீட் தேர்வு விவகாரத்தில் அதிமுகவின் இரட்டை வேடத்தை விமர்சித்து, கோவை மாநகர் மாவட்ட திமுக மாணவர் அணி சார்பில் இன்று ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. நீட் தேர்வை ஒழிக்கும் ரகசியம் இதுவே, என்ற தலைப்பில் ஒட்டப்பட்டுள்ள அந்த போஸ்டர்களில், அதிமுகவை அடிமை அதிமுக என்று கடுமையாக விமர்சித்துள்ளனர். பாஜகவுடன் கூட்டணி வைத்து பதவிக்காக காலில் விழுந்து கொண்டு, மேடைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி மாணவர்களின் மீது அக்கறை உள்ளது போல் அதிமுக நாடகமாடுவதாக திமுக மாணவர் அணி குற்றம் சாட்டியுள்ளது. மேலும், மாநில அரசின் கல்வி உரிமையில் தலையிடாதே, தமிழ்நாட்டில் மருத்துவ இடங்களை கொள்ளையடிக்காதே, தமிழ்நாட்டின் மருத்துவ கல்லூரிகள் தமிழர்களின் சொத்து, சமூக நீதி இடஒதுக்கீடு உரிமை மீது தாக்குதல் நடத்தாதே! ஏழை மாணவர்களின் மருத்துவ கனவினை அழிக்காதே, தமிழினத்தை வஞ்சிக்கும் ஆரிய வெறியை கைவிடு, போன்ற வாசகங்கள் அந்த போஸ்டர்களில் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, அதிமுகவின் இரட்டை நிலைப்பாட்டை விமர்சிக்கும் வகையில், எடப்பாடியே உங்களின் ரகசியம், சசிகலா முதல் அமித்ஷா வரை பல்லைக் காட்டி மண்டியிடுவதே! என்று திமுக மாணவர் அணி கடுமையாக சாடியுள்ளது. நீட் தேர்வு விவகாரத்தில் அதிமுகவின் நிலைப்பாடு குறித்து திமுக மாணவர் அணியின் இந்த போஸ்டர்கள் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story