மின்சாரம் தாக்கியதில் வெல்டிங் தொழிலாளி பலி

மின்சாரம் தாக்கியதில் வெல்டிங் தொழிலாளி பலி
X
மதுரை அருகே மின்சாரம் தாக்கியதில் வெல்டிங் தொழிலாளி உயிரிழந்தார்.
மதுரை மாவட்டம் தனக்கன்குளம் எம் ஜி ஆர் நகரில் ரவி ராஜ் செட்டில் நேற்று (ஏப்.22) காலை 11 மணியளவில் சிந்தாமணி பகுதி கஜேந்திரபுரத்தைச் சேர்ந்த ராஜா என்பவரின் மகன் சூர்யா(24 ) என்பவர் வெல்டிங் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்பொழுது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து அவரது தந்தை ஆஸ்டின்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story