கரூரில், பழைய ஓய்வூதிம் அமுல்படுத்த வேண்டும்-ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டம் பேரணி

கரூரில், பழைய ஓய்வூதிம் அமுல்படுத்த வேண்டும்-ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டம் பேரணி
கரூரில், பழைய ஓய்வூதிம் அமுல்படுத்த வேண்டும்-ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டம் பேரணி தமிழக முழுவதும் தேர்தல் நேரத்தில் திமுக அறிவித்த புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை நிறைவேற்றுவதாக கூறியதை நடப்பு சட்டமன்ற கூட்டத்தில் அறிவிப்பு செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நேற்று மாலை நேரத்தில் தமிழக முழுவதும் ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி நடத்தினர். இதனைத் தொடர்ந்து கரூர் லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில், கரூர் மாவட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பின் கூட்டுத் தலைமை அன்பழகன் மற்றும் வேலுமணி தலைமையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமுல் படுத்த வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். முன்னதாக அவர்கள் பேரணியாக லைட் ஹவுஸ் கார்னர், ஜவகர் பஜார் வழியாக கரூர் மாநகராட்சி அலுவலகம் முன்பாக பேரணியை நிறைவு செய்தனர். இதில் திமுக கடந்த சட்டமன்ற தேர்தலின் போது தேர்தல் வாக்குறுதியின் படி புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமுல் படுத்த வேண்டும், அரசின் பல்வேறு துறைகளில் 30 விழுக்காட்டுக்கும் மேலாக உள்ள காலி பணியிடங்களை நிரப்பபட வேண்டும், உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பை சேர்ந்த திரளான ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
Next Story