கோவை: பாரதியார் பல்கலைக்கழக மாணவர்கள் ஆட்சியரிடம் மனு !

கோவை: பாரதியார் பல்கலைக்கழக மாணவர்கள் ஆட்சியரிடம் மனு !
X
பாரதியார் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்களை பாதுகாத்திட வேண்டுமென இந்திய மாணவர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவர்களுக்கான கல்விக் கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரியும், ஆய்வுக்குத் தேவையான ரசாயனங்கள் மற்றும் கருவிகளை உடனடியாக வழங்க வலியுறுத்தியும் இந்திய மாணவர் சங்கத்தினர் நேற்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். Synopsis, Thesis மற்றும் Resubmission PhD கட்டணங்களை உயர்த்திய பல்கலைக்கழக நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு அவர்கள் கண்டனம் தெரிவித்தனர். மேலும், ஆங்கிலத்துறை பேராசிரியர் பத்மநாபனின் PhD சான்றிதழின் உண்மைத்தன்மையை விசாரிக்கவும், பல்கலைக்கழகத்தில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பவும், அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். முன்னதாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story