ஆண்டிப்பட்டி அருகே தனியார் பேருந்தும் சிமெண்ட் ஏற்றி வந்த மினி வேன் நேருக்கு நேர் மோதிக்கொண்ட சிசிடிவி காட்சிகள்..
தேனி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஆண்டிப்பட்டி மின்வாரிய அலுவலகம் அருகே கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தனியார் பேருந்தும், சிமெண்ட் லோடு ஏற்றி வந்த சரக்கு வேனும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிய விபத்தில், வேனை ஓட்டி வந்த ஆண்டிப்பட்டி சீனிவாசா நகரை சேர்ந்த 44 வயதுடைய முத்துலிங்கம் என்பவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தனியார் பேருந்தில் பயணம் செய்த 20 க்கும் மேற்பட்ட பயணிகள் காயங்களுடனும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து நடந்தது எப்படி என்பது குறித்து தனியார் பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகள் வெளியாகி உள்ளது. இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது
Next Story




