டெக்ஸ் பார்க் பிரிவு அருகே சாலையை கடக்க முயன்ற இளைஞர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து. இளைஞர் படுகாயம்.

டெக்ஸ் பார்க் பிரிவு அருகே சாலையை கடக்க முயன்ற இளைஞர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து. இளைஞர் படுகாயம்.
டெக்ஸ் பார்க் பிரிவு அருகே சாலையை கடக்க முயன்ற இளைஞர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து. இளைஞர் படுகாயம். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, புத்தாம்பூர் அருகே காளிபாளையம்,குடி தெருவை சேர்ந்தவர் சேதுபதி வயது 28. இவர் ஏப்ரல் 18ஆம் தேதி மாலை 5:15-மணி அளவில், கரூர்- திண்டுக்கல் சாலையில் உள்ள டெக்ஸ் பார்க் பிரிவு சாலையில், சாலையை கடந்து செல்ல முயன்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று, நடந்து சென்ற சேதுபதி மீது மோதிவிட்டு நிற்காமல் மின்னல் வேகத்தில் சென்று விட்டது. இதில் பலத்த காயம் அடைந்த சேதுபதியை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இச்சம்பவம் தொடர்பாக சேதுபதி அளித்த புகாரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், மோதிவிட்டு நிற்காமல் சென்ற அந்த வாகனம் எது? அதன் ஓட்டுனர் யார்? என்ற கோணத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் அரவக்குறிச்சி காவல் துறையினர்.
Next Story